'பல்வேறு வகை உணவு உட்கொள்ளுதல்’ குறித்த பிரச்சாரம்
June 28 , 2023 916 days 455 0
திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின்-மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனமானது அதன் கிழங்குப் பயிர் வகைகள் அடிப்படையில் அமைந்த ‘பல்வேறு வகை உணவு உட்கொள்ளுதல்’ என்ற பிரச்சாரத்தை விரிவுபடுத்த தயாராகி வருகிறது.
மத்திய கிழங்குப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனமானது, நடப்பு நிதியாண்டில் ஒடிசாவில் இந்தப் பிரச்சாரத்தினைத் தொடங்க உள்ளது.
2024-25 ஆம் ஆண்டின் இறுதியில், அந்த மாநிலத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களுக்கு விரிவுபடுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
பழங்குடியினச் சமூகங்களில் பெருமளவில் நிலவும் ஊட்டச்சத்துக் குறைபாட்டினை ஈடு செய்வதற்கும், சமச்சீர் உணவு வழங்கீட்டினை உறுதி செய்வதற்காகவும், அவர்கள் மத்தியில் உயிரிச் செறிவூட்டப்பட்ட கிழங்குகள் மற்றும் அவற்றிலிருந்து தயாரிக்கப் பட்ட மதிப்புக் கூட்டப்பட்டப் பொருட்களை நன்கு பிரபலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
ஒரு குறிப்பிடத்தக்க பல்வேறு வகை உணவு உட்கொள்ளுதல் (‘ரெயின்போ டயட்’) என்பது வெவ்வேறு வண்ணங்களில் காணப்படும் தூய்மையானப் பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றினை உள்ளடக்கிய வகையிலான உணவினை உட்கொள்ளும் முறையாகும்.