பள்ளிகளில் இணைய மிரட்டல் உள்ளிட்ட மிரட்டல்கள் மற்றும் வன்முறைகளுக்கு எதிரான சர்வதேச தினம் – 04 நவம்பர்
November 8 , 2021 1385 days 325 0
இந்த சர்வதேச தினமானது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தின் முதல் வியாழன் அன்று யுனெஸ்கோ நிறுவனத்தினால் அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டில் இத்தினமானது நவம்பர் 4 ஆம் தேதி அன்று வருகிறது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு "குழந்தைகள் மற்றும் இளைஞர்களை குறி வைக்கும் இணைய மிரட்டல் மற்றும் இணைய வன்முறையின் பிற வடிவங்களை சமாளித்தல்" என்பதாகும்.
பள்ளிகளில் வன்முறை மற்றும் இணைய மிரட்டல் ஆகியவை குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் கல்வி, ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான உரிமைகளை மீறுவதாகும் என்பதை இந்த தினம் அங்கீகரிக்கிறது.