மத்தியக் கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் மற்றும் மத்தியப் பழங்குடியினர் நலன் அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா ஆகியோர் இணைந்து இந்தத் திட்டத்தைத் துவக்கி வைத்துள்ளனர்.
தொழில்முனைதல், புதுமைகள், தனிநபர் அறிவுசார் சொத்துரிமை, வடிவமைப்புச் சிந்தனை, பொருள் உருவாக்கம் ஆகியவற்றில் 50,000 பள்ளி ஆசிரியர்களுக்கு இது பயிற்சி அளிக்கும்.