இந்தியப் பிரதமரின் ஆஸ்திரேலியப் பயணத்தின் போது, தமிழ்நாட்டுக் கோயில்களில் இருந்து திருடப்பட்ட மூன்று தொன்மையான கலைப்பொருட்களை ஆஸ்திரேலியா இந்தியாவிடம் ஒப்படைக்கிறது.
இத்தொல்பொருட்களில் பத்ரகாளி அம்மனின் 11-12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால வெண்கல சூலம், கருங்கல்லால் ஆன நந்தி சிலை மற்றும் ஆறு முகங்களைக் கொண்ட கார்த்திகேயர் (சண்முகர்) ஆகியோரின் சிலைகள் அடங்கும்.
தமிழ்நாட்டுக் கோயில்களிலிருந்து இவை சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டதை தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு (CID) நடத்திய விசாரணைகள் உறுதிப் படுத்தியதைத் தொடர்ந்து, 'பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தின்' (MLAT) கீழ் இந்தத் தொல்பொருட்கள் திருப்பி அனுப்பப் படுகின்றன.
இந்தியாவிலிருந்து சட்டப்பூர்வமாக ஏற்றுமதி செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பதை ஒரு சுயாதீனமான உரிமைச் சான்று ஆய்வு (provenance review) உறுதிப் படுத்தியதைத் தொடர்ந்து, அந்தத் தொல்பொருட்களைத் திருப்பித் தர ஆஸ்திரேலிய நாட்டின் தேசியக் கலைக்கூடம் (National Gallery of Australia) ஒப்புக் கொண்டது.
பத்ரகாளி சூலம் கொல்லுமாங்குடி (திருவாரூர்) ஸ்ரீ காசி விஸ்வநாத சுவாமி கோயிலிலும், கார்த்திகேய சிற்பம் மானம்பாடி (தஞ்சாவூர்) நாகநாதசுவாமி கோயிலிலும் உருவானது.