TNPSC Thervupettagam

பழங்குடிப் பெண்களின் வாரிசுரிமை உரிமைகள்

March 1 , 2026 17 days 76 0
  • 1956 ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமைச் சட்டம், பட்டியலின பழங்குடியினருக்குப் பொருந்தாது என்பதை உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியது.
  • நவாங் Vs பகதூர் வழக்கில் (அக்டோபர் 2025) இந்திய உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.
  • "இந்து சமயத்தில் உள்ளடக்கப்பட்ட" பழங்குடிப் பெண்களுக்கு வாரிசுரிமைகளை நீட்டித்த இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்ற உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தது.
  • பாராளுமன்றம் இதற்கென ஒரு சட்டம் இயற்றும் வரை, 1956 ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமைச் சட்டத்திலிருந்து பட்டியல் பழங்குடியினர் விலக்கப்படுகிறார்கள் என்றும் அது கூறியது.
  • இந்திய அரசியலமைப்பின் பிரிவு 342 இன் கீழ் பட்டியலினப் பழங்குடியினர் அங்கீகரிக்கப் பட்டுள்ளனர்.
  • பழங்குடியினப் பெண்களுக்கான வாரிசுரிமைகளில் ஏற்படும் எந்தவொரு மாற்றமும் நீதித்துறையால் அல்ல, பாராளுமன்றத்தால் செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்