மத்தியப் பழங்குடியின விவகாரங்கள் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா அவர்கள் இந்தியாவின் மிகப்பெரிய கைவினைப் பொருட்கள் மற்றும் கரிமப் பொருட்கள் சந்தையான பழங்குடியினர் இந்தியா-இ-சந்தையிடல் என்ற ஒன்றைத் தொடங்கி வைத்துள்ளார்.
இது அவர்களது பொருட்களை நேரடியாகச் சந்தைப்படுத்த வேண்டி அவர்களுக்கு உதவ இருக்கின்றது. மேலும் இது ஆன்லைன் வர்த்தகத்தின் உடனடிப் பயன்களை அவர்களுக்கு அளிக்கின்றது.
இது பழங்குடியினர் வர்த்தகத்தின் டிஜிட்டல்மயமாக்கலை நோக்கிய ஒரு முக்கிய நடவடிக்கையாக விளங்குகின்றது.