காசநோயில்லா இந்தியாவை (TB Mukt Bharat) அடையும் நோக்கில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், பழங்குடியினர் காசநோய் திட்டத்தினைத் தொடங்கி வைத்துள்ளார்.
கடந்த ஐந்தாண்டுகளில் காசநோய்க்கான நிதி ஒதுக்கீட்டின் அளவையும் ஏற்கனவே அரசு அதிகரித்துள்ளதாக இவர் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு உலக காசநோய் தினத்தன்று லட்சத்தீவு (ஒன்றியப் பிரதேசம்) மற்றும் ஜம்மு & காஷ்மீரின் பட்காம் மாவட்டம் ஆகியவை காசநோய் அல்லாத பகுதிகளாக அறிவிக்கப் பட்டன.