பழங்குடியின மக்களின் ஆரோக்கியத்திற்கான உலகளாவியச் செயல் திட்டம்
June 4 , 2023 811 days 429 0
பழங்குடியின மக்களின் ஆரோக்கியத்திற்கான ஒரு உலகளாவியச் செயல் திட்டத்தை உருவாக்குவதற்காக முன்மொழியப்பட்ட ஒரு வரைவு தீர்மானத்தினை உலக சுகாதார அமைப்பு ஏற்றுக் கொண்டது.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, தற்போது உலகின் சுமார் 90 நாடுகளில் 476 மில்லியன் பழங்குடியினர் உள்ளனர்.
அவர்கள் 7,000 மொழிகளைப் பேசுபவர்களாகவும், 500 வெவ்வேறுக் கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர்.
பழங்குடியின மக்களின் ஆயுட்காலமானது இதரப் பொதுமக்களை விட 20 ஆண்டுகள் குறைவாகும்.
பழங்குடியின மக்களின் குறிப்பிட்ட தேவைகளை அடையாளம் காண்பதற்கும் மற்றும் அவற்றிலுள்ள இடைவெளிகளை நிரப்பச் செய்வதற்குமான நெறிமுறைத் தரவுகளின் தொகுப்பை உருவாக்குமாறு 194 உறுப்பினர் நாடுகளுக்கும் வலியுறுத்தப் பட்டன.