பழங்குடியினச் சமூகங்களுக்காக என்று பிரத்தியேகமாக மரபணு வரிசைமுறை முன்னெடுப்பினைத் தொடங்கிய முதல் இந்திய மாநிலமாக குஜராத் திகழ்கிறது.
பழங்குடியின மரபணு வரிசையாக்கத் திட்டம் ஆனது 17 மாவட்டங்களில் உள்ள பழங்குடியின மக்களிடமிருந்து 2,000 நபர்களின் மரபணுக்களை வரிசைப்படுத்தும்.
"குஜராத்தில் பழங்குடியின மக்களுக்கான குறிப்பு மரபணு தரவுத் தளத்தை உருவாக்குதல்" என்ற தலைப்பில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப் படுகிறது.
இது குஜராத் உயிரித் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தினால் (GBRC) செயல்படுத்தப் படுகிறது.
இது 2025–26 ஆம் ஆண்டின் மாநில நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிதியளிக்கப்படுகிறது.
இந்த முன்னெடுப்பு அரிவாள் வடிவ உயிரணு இரத்த சோகை, தலாசீமியா மற்றும் பரம்பரை வழி புற்றுநோய்கள் போன்ற மரபணு கோளாறுகளைக் கண்டறிந்து, ஆரம்ப கால நடவடிக்கை மற்றும் துல்லியமான சுகாதாரப் பராமரிப்பை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சேகரிக்கப்பட்ட மரபணுத் தரவுகள், மேம்பட்டத் தொழில்நுட்பம் மூலம் பழங்குடிச் சமூகங்களை மேம்படுத்தும் அதே வேளையில், இயற்கையான நோய் எதிர்ப்புச் சக்திக்கான குறிப்பான்களை அடையாளம் காணவும், தனிப் பயனாக்கப்பட்ட சுகாதாரப் பாதுகாப்புத் தீர்வுகளை ஆதரிக்கவும் உதவும்.