பழங்குடி அமைப்புகள் நுழைவு அனுமதிப் படிவ முறையைக் கோருதல்
March 4 , 2020 1906 days 632 0
மேகாலயாவில் உள்ள பழங்குடியின அமைப்புகள் வெளிஆட்கள் மேகாலயா மாநிலத்திற்குள் நுழைவதைக் கட்டுப்படுத்தக்கூடிய நுழைவு அனுமதிப் படிவ முறையைக் கோருகின்றன.
இது அனுமதிப் படிவ முறையின் கீழ் பாதுகாக்கப்பட்டு வரும் ஒரு மாநிலத்திற்குச் செல்ல அல்லது அந்த மாநிலத்தில் தங்குவதற்கு வெளியாட்களால் சமர்ப்பிக்கப்படும் ஒரு ஆவணமாகும்.
இந்த இடத்தின் உள்ளூர் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்கு நுழைவு அனுமதிப் படிவ முறை உதவுகின்றது. மேலும் அங்கு சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களையும் வெளியாட்களின் அத்துமீறலையும் இது தடுக்கின்றது.
தற்போது, அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், மணிப்பூர் மற்றும் நாகாலாந்து ஆகிய நான்கு வடகிழக்கு மாநிலங்கள் ஏற்கனவே இந்த முறையின் கீழ் உள்ளன.
நுழைவு அனுமதிப் படிவமானது அந்தந்த மாநில அரசால் வழங்கப் படுகின்றது.
அனுமதிப் படிவம் என்பது வங்காள கிழக்கு எல்லை ஒழுங்குமுறைச் சட்டம் 1873ன் நீட்டிப்பாகும்.