பழங்குடி இனச் சட்டங்கள் குறித்த தீர்மானங்கள் - திரிபுரா
February 15 , 2020 1970 days 689 0
திரிபுரா மாநிலப் பழங்குடியினர் பகுதி தன்னாட்சி மாவட்ட மன்றமானது (Tripura Tribal Areas Autonomous District Council - TTAADC) மூன்று பழங்குடி இனங்களின் சட்டங்கள் குறித்தத் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. அந்த 3 பழங்குடி இனங்களாவன:
மிசோ
கைபெங் மற்றும்
மால்சம்
ஆறாவது அட்டவணையின்படி, அசாம், மேகாலயா, திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய நான்கு மாநிலங்கள் தொழில்நுட்ப ரீதியாக மற்ற பகுதிகளிலிருந்து வேறுபடக் கூடிய பழங்குடிப் பகுதிகளைக் கொண்டுள்ளன.
அவற்றின் மீது சில சட்டமன்ற மற்றும் நீதித்துறை அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கு மாவட்ட மன்றங்கள் மற்றும் பிராந்திய மன்றங்களை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி ஒவ்வொரு மாவட்டமும் ஒரு தன்னாட்சி மாவட்டமாகும். மேலும் ஆளுநர் அறிவித்தலின் மூலம் அந்த பழங்குடியினப் பகுதியின் எல்லைகளை மாற்ற அல்லது பிரிக்க முடியும்.