TNPSC Thervupettagam

பழமையான நுண்ணுயிர் வாழ்க்கையின் தடயங்கள்

August 24 , 2026 11 hrs 0 min 19 0
  • கிழக்கு இந்தியாவில் உள்ள ஒரு பாறையில் குறைந்தது 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய நுண்ணுயிர் வாழ்க்கையின் ஆதாரங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • இந்தப் பாறையானது ஜார்கண்ட் மற்றும் ஒடிசாவின் சில பகுதிகளை உள்ளடக்கிய சிங்பூம் நிலைக் கண்டப்பகுதியில் (Singhbhum Craton) உள்ள பிதார்தாரியில் (Bhitardari) கண்டறியப்பட்ட கார்பன் கலந்த கருங்கல் ஆகும்.
  • ஆய்வு செய்யப்பட்ட எட்டு சிர்கான் படிகங்களில் (zircon crystals) நான்கு சுமார் 3,497 மில்லியன் ஆண்டுகள் வயதைக் கொடுத்தன, இது பாறையின் வயதை நிறுவுவதற்கு உதவியது.
  • கார்பன் ஐசோடோப்பு வடிவங்கள் மற்றும் சிதைந்த கரிமப் பொருட்கள் உள்ளிட்ட வேதியியல் சான்றுகள், கார்பன் உயிரினங்களால் உற்பத்தி செய்யப்பட்டது என்பதைக் குறிக்கின்றன.
  • உறுதிப்படுத்தப்பட்ட உயிரி-கையெழுத்துடன் (biosignature) நேரடியாகக் கணிக்கப் பட்ட மிகப்பழமையான பாறையாக இந்தக் கண்டுபிடிப்பு இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
  • பூமி உருவாகி சுமார் 1 பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, பூமியின் வரலாற்றில் ஒப்பீட்டளவில் மிக விரைவாகவே நுண்ணுயிர் வாழ்க்கை இருந்ததை இந்தக் கண்டுபிடிப்பு உணர்த்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்