கும்பகோணம் அருகே பழையாறையில் உள்ள சோமநாதர் கோயிலில் இந்து சமய மற்றும் அறநிலையத் துறை (HR&CE) ஏழு அடுக்கு கோபுரத்தைக் கட்டத் தொடங்கி உள்ளது.
தேசியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (NIT) மண் மற்றும் தற்போதுள்ள கோயில் அமைப்பை ஆய்வு செய்து, பரந்த அடித்தளத்துடன் பொருந்தக் கூடிய முந்தைய ஐந்து அடுக்குத் திட்டத்திற்குப் பதிலாக ஏழு அடுக்கு கோபுரத்தைக் கட்ட பரிந்துரைக்கிறது.
இந்தக் கோயிலில் முன்னர் மொட்டை கோபுரம் (முடிக்கப்படாத கோபுரம்) என்று அழைக்கப்படும் புறக்கணிக்கப்பட்ட கிழக்கு நோக்கிய கோபுரம் இருந்தது.
தலைநகர் தஞ்சாவூருக்கு மாற்றப்படுவதற்கு முன்பு பழையாறை ஒரு முக்கியமான சோழத் தலைநகராக இருந்தது.
உத்தம சோழரின் அரச ஆணை பழையாறை அரண்மனையிலிருந்து பதிவு செய்யப் பட்டது என்பதோடுஇது அதன் வரலாற்று முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
இந்தக் கோயில், அப்பர், சம்பந்தர் மற்றும் சுந்தரர் ஆகியோரின் பாடல்களில் பாராட்டப் பட்ட முக்கியமான சைவக் கோயில்களில் ஒன்றாகும்.
இதன் மகாமண்டபம் (பிரதான மண்டபம்) ஒரு தேர் போல வடிவமைக்கப் பட்டு இருப்பதால் இது காரா கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
K.A. நீலகண்ட சாஸ்திரி குறிப்பிடுவது போல, இராஜராஜ சோழனின் சகோதரி குந்தவையின் வசிப்பிடமாகவும், சிறிது காலம் இராஜராஜனின் வசிப்பிடமாகவும் இருந்த ஒரு அரண்மனையுடன் பழையாறையில் அருள்மொழிதேவ-ஈஸ்வர கோயில் இருந்தது.
இந்தக் கட்டுமானம், 1,000 ஆண்டுகள் பழமையான கோயில்களை மீட்டெடுத்து பழுது பார்க்கும் தமிழக அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாகும் மேலும் இத்திட்டத்தின் கீழ் சுமார் 4,000 கோயில்கள் ஏற்கனவே கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளன.