தேசியக் கடலோர ஆராய்ச்சி மையமானது (National Centre for Coastal Research ) நெகிழிக் கழிவுகளை “உருக்கப்பட்ட நெகிழிப் பாறைகள்” அல்லது பலகைகளாக மாற்றுவதன் மூலம் நெகிழிக் கழிவுகளை அப்புறப்படுத்தப் பரிந்துரைத்துள்ளது.
இது பவளப் பாறைகள் வளருவதற்காக கடற்பரப்பின் மீது அக்கழிவுகளை கிடத்தத் திட்டமிட்டுள்ளது.
மன்னார் வளைகுடாவின் கடல்சார் தேசியப் பூங்கா இத்திட்டத்தை எதிர்த்து இருக்கின்றது. இது இத்திட்டத்தின் மூலம் பவளப் பாறைகள் அழிந்து விடும் என்று அஞ்சுகின்றது.
இது 2002 ஆம் ஆண்டு முதல் பவள மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது.