இத்தினமானது பவள முக்கோண முன்னெடுப்பு என்ற அமைப்பினால் கடைபிடிக்கப் படுகிறது.
இந்த முன்னெடுப்பு அமைப்பானது மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், சாலமன் தீவுகள், பப்புவா நியூ கினியா மற்றும் தைமூர் லெஸ்தே ஆகிய ஆறு நாடுகளின் ஒரு பலதரப்பு கூட்டிணைவாகும்.
இது கடல்சார் மற்றும் கடலோர வளங்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் உணவுப் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவும் செயலாற்றும் ஆறு நாடுகளின் பலதரப்பு கூட்டிணைவாகும்.
பவள முக்கோண முன்னெடுப்பானது பவளப்பாறைகள், மீன் வளம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவை மீதான பவள முக்கோண முன்னெடுப்பு எனவும் அழைக்கப் படுகிறது.