லேஹ் நகரத்தில் ஒரு பஷ்மினா பரிசோதனை மையம் அமைக்கப்படவிருப்பதாக இந்தியத் தரங்கள் அமைப்பு (BIS - Bureau of Indian Standards) அறிவித்துள்ளது.
இது சேகரிக்கப்பட்ட பஷ்மினாவின் தரத்தைப் பரிசோதிப்பதற்காக லேஹ் நகரத்தில் உள்ள லடாக் தன்னாட்சி மலை வளர்ச்சி ஆணைய ஆய்வகத்துடன் இணைந்து அமைக்கப்படவிருக்கின்றது.
பஷ்மினா என்பது காஷ்மீர் ஆடுகளின் தனித்துவமான 4 இனங்களிலிருந்து வரும் காஷ்மீர் கம்பளியின் ஒரு சிறந்த வகையாகும்.