TNPSC Thervupettagam

பஹ்ரைன் நாட்டிற்கு ஆப்பிள்கள் ஏற்றுமதி – APEDA

August 15 , 2021 1451 days 628 0
  • வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமானது (Agricultural and Processed Food Products, Export Development Authority – APEDA) இமாச்சலப் பிரதேச தோட்டக்கலை உற்பத்திப் பொருட்களின் சந்தைப் படுத்துதல் மற்றும் பதப்படுத்துதல் கழக நிறுவனத்துடன் இணைந்து 5 தனித்துவ மிக்க ஆப்பிள் வகைகள் அடங்கிய முதல் சரக்குப் பெட்டகத்தினை பஹ்ரைன் நாட்டிற்கு ஏற்றுமதி செய்துள்ளது.
  • புதிய நாடுகளுக்கு வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதை ஊக்குவிப்பதற்காக வேண்டி இது மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • டார்க் பரோன் காலா, ராயல் டெலீசியஸ், ஸ்கார்லெட் ஸ்பர், ரெட் வேலாக்ஸ் மற்றும் கோல்டன் டெலிசியஸ் உள்ளிட்ட 5 ஆப்பிள் வகைகள் பஹ்ரைன் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப் பட்டுள்ளன.
  • முதல் சரக்குப் பெட்டகமானது APEDA நிறுவனத்தில் பதிவு செய்துள்ள DM எண்டர்பிரைசெஸ் எனும் நிறுவனத்தினால் ஏற்றுமதி செய்யப்பட்டது.
  • இந்த ஆப்பிள்களானது, முன்னணி விற்பனையாளரான அல் ஜசிரா குழுமத்தினால் நடத்தப் படும் ஆப்பிள் விளம்பர நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
  • ஆப்பிள் விளம்பர நிகழ்ச்சியானது 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று நடைபெறும் 75வது இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் தொடங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்