சமூக ஊடகங்களில் பரவும் பொய்யான செய்திகளை எதிர்த்து தக்க நடவடிக்கைகள் எடுப்பதற்கு உதவும் ஒரு புதிய சட்டத்தினைப் பாகிஸ்தானிய அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.
இந்தப் புதியச் சட்டமானது ஒரு நபரையோ அல்லது ஒரு நிறுவனத்தினையோ அவதூறாகப் பேசினால் விதிக்கப்படும் ஒரு அதிகபட்ச தண்டணையை 3 ஆண்டுகள் என்ற அளவிலிருந்து 5 ஆண்டுகளாக உயர்த்தியதோடு குற்றவாளிகள் ஜாமீன் பெறுவதைக் கட்டுப்படுத்தும் விதிமுறையையும் கொண்டுள்ளது.
தவறான செய்திகளைப் பரப்புதல் ஆனது, ஜாமீன் பெறமுடியாத ஒரு குற்றமாக வகைப்படுத்தப்பட்டு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையமானது இந்தப் புதியச் சட்டத்தினை ஜன நாயகத்திற்கு முரணானது என்று விவரித்துள்ளது.