பாகிஸ்தானின் முதல் பெண் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி
July 28 , 2018 2727 days 958 0
பாகிஸ்தான் தலைமை நீதிபதியான சஹிப் நிசர், நீதிபதி தஹீரா சப்தர் –ஐ பலூசிஸ்தான் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமித்துள்ளார்.
இதன் மூலம் பாகிஸ்தான் உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக ஒரு பெண்ணை நியமித்திருப்பது இதுவே முதன் முறையாகும்.
பலூசிஸ்தானில் 1982-ல் முதல் பெண் உரிமையியல் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்று இவர் வரலாறு படைத்தார்.
தற்பொழுது நீதிபதி தஹீரா தேசத் துரோக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷராப் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளில் ஒருவர் ஆவார். முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷராப் 2007 ஆம் ஆண்டு நவம்பர் 3 அன்று நாட்டில் அவசர நிலையை அறிவித்ததற்காக குற்றம் சாட்டப்பட்டார்.