TNPSC Thervupettagam

பாகிஸ்தானில் எண்ணெய் உற்பத்தி

August 4 , 2025 10 days 67 0
  • பாகிஸ்தானின் எண்ணெய் உற்பத்தி தொடர்பான வரையறுக்கப்பட்ட வரலாறு இருந்த போதிலும், அதன் பெரிய எண்ணெய் இருப்புக்களை மேம்படுத்துவதற்கு பாகிஸ்தானுடன் ஒத்துழைப்பை மேற்கொள்ள உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
  • பாகிஸ்தானின் நிரூபிக்கப்பட்ட கச்சா எண்ணெய் இருப்பு 234 மில்லியன் முதல் 353 மில்லியன் பீப்பாய்கள் வரை மதிப்பிடப்பட்டுள்ளது.
  • இது இந்தியாவின் 4.8 முதல் 5 பில்லியன் பீப்பாய்கள் இருப்புக்களை விட மிகக் குறைவு ஆகும்.
  • 2015 ஆம் ஆண்டு அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாக அறிக்கையானது, பாகிஸ்தானின் தொழில்நுட்ப ரீதியாக மீட்டெடுக்கக் கூடிய நிலக்கீழ் எண்ணெய் / ஷேல் எண்ணெய் 9.1 பில்லியன் பீப்பாய்கள் என மதிப்பிட்டுள்ளது.
  • ஆனால் அதில் ஒரு சிறிய பகுதி மட்டுமே பொருளாதார ரீதியாக சாத்தியமானது.
  • இந்தியாவின் 580 ஆயிரம் பீப்பாய்களுடன் ஒப்பிடும்போது பாகிஸ்தான் தற்போது ஒரு நாளைக்கு சுமார் 60 ஆயிரம் பீப்பாய்கள் எண்ணெயை உற்பத்தி செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்