பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் 27வது அரசியலமைப்புத் திருத்தம் ஆனது எதிர்க் கட்சிகளின் நாடு தழுவிய போராட்டங்களைத் தூண்டியது.
இந்தத் திருத்தம் கூட்டுப் பணியாளர் குழுவின் தலைவருக்குப் பதிலாக புதிய பாதுகாப்புப் படைத் தலைவரை நியமிப்பதற்கும், ஒரு கூட்டாட்சி அரசியலமைப்பு நீதிமன்றத்தை உருவாக்குவதற்கும் முன்மொழிகிறது.
இது உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தை மாற்றுவதற்கும், உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் முயல்கிறது.
இது சட்டமாக மாறுவதற்கு முன்பு அரசாங்கத்திற்கு இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஒப்புதல் தேவையாகும்.
எதிர்க்கட்சி குழுக்கள் இந்த நடவடிக்கை அரசியலமைப்பை அச்சுறுத்துவதாகக் கூறுகின்றன அதே நேரத்தில் சில சட்ட வல்லுநர்கள் இதை ஒரு நீதித்துறைக்கான சீர்திருத்தமாகக் கருதுகின்றனர்.