பாக்டீரியாவில் ஏன் வைரஸ் தொற்று இல்லை? - மூலக்கூறு கத்தரி
August 28 , 2019 2207 days 726 0
போபாலில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (IISER - Indian Institute of Science Education and Research) விஞ்ஞானிகள் “McrBC” இன் அணுக் கட்டமைப்பை தீர்மானித்துள்ளனர்.
McrBC ஒரு பாக்டீரிய புரதம் ஆகும்.
இது ஒரு மூலக்கூறு கத்தரியாகச் செயல்படுகின்றது. இது பாக்டீரியாவில் வைரஸ் தொற்றுகளைத் தடுக்கின்றது.
இது எலக்ட்ரான் “கிரையோ மைக்ரோஸ்கோபி” ஐப் பயன்படுத்தித் தீர்மானிக்கப்பட்ட இந்தியாவிலிருந்து உயர் தெளிவு திறன் கொண்ட கட்டமைப்பின் முதல் அறிக்கையாகும்.இது பொதுவாக கிரையோ- EM என அழைக்கப்படும்.
McrBC இன் கட்டமைப்பை நிர்ணயிப்பது “உண்ணிச் சிகிச்சையில்” நீண்டகால தாக்கங்களைக் கொண்டுள்ளது. இது எதிர்காலத்தில் மருந்து எதிர்ப்புத் தொற்று நோய்களை எதிர்த்துப் போராட உதவும்.
உண்ணிகள் என்பது பாக்டீரியா செல்களைப் பாதித்து மற்றும் அவற்றைக் கொல்லும் வைரஸ்களின் குழுக்களாகும்.