இந்தியத் தொல்லியல் துறையானது (ASI – Archaelogical survey of India) 2018 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப் பட்ட பாக்பட் தளம் மற்றும் அதன் மிச்சங்களைத் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தளமாக அறிவித்துள்ளது.
இந்தத் தளமானது கி.மு. 2000 ஆண்டைச் சேர்ந்த போர் புரியும் வகுப்பைச் சேர்ந்தவர்கள் இங்கு இருந்ததற்கான ஆதாரத்தைக் கொண்டுள்ளது.
3 ரதங்கள், பூட்டப்பட்ட சவப்பெட்டிகள், பாதுகாப்புக் கலசங்கள், வாள் மற்றும் தலைக் கவசங்கள் ஆகியவை இந்தத் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சில முக்கியப் பொருட்களாகும்.
ASI ஆனது இதனை “கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக் காலத்தைச் சேர்ந்த பண்டைய ஹரப்பா நாகரிகத்தின் ஒரு மிகப்பெரிய இடுகாடு” என்று குறிப்பிடுகின்றது.
ASI-ன் அறிவிக்கையானது பண்டைய நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் துறை தளங்கள் & மிச்சங்கள் சட்டம், 1958 என்ற சட்டத்தின் விதிகளின் கீழ் வெளியிடப் பட்டுள்ளது.