July 26 , 2026
2 days
53
- பீகாரின் ஷியோஹரில், 68.80 கி.மீ நீளமுள்ள பெல்வா-மினாபூர் இணைப்பு வாய்க்காலை (பெல்வதார்) பீகார் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
- பாக்மதி ஆற்றிலிருந்து உபரி நீரைப் புதி கண்டக் ஆற்றிற்குத் திருப்பிவிடும் வகையில் பெல்வா-மினாபூர் இணைப்பு வாய்க்கால் வடிவமைக்கப் பட்டுள்ளது.
- இது அதிக திறன் கொண்ட ஒரு செயற்கை நீர் திசைமாற்ற அமைப்பாகும்.
- இது பீகாரில் உள்ள இரண்டு முக்கிய ஆற்றுப் படுகைகளுக்கு இடையே ஒரு சீரான நீரியல் இணைப்பை உருவாக்குகிறது.
- இது பீகாரில் நிறைவு செய்யப்பட்ட முதல் நதி இணைப்புத் திட்டமாகும்.
- இது கோசி-மெச்சி இணைப்பு போன்ற எதிர்காலத் திட்டங்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்கிறது.
Post Views:
53