செனாப் நதியில் உள்ள பாக்லிஹார் அணை வழியான நீர் ஓட்டத்தை இந்தியா நிறுத்தி உள்ளது.
ஜம்முவின் அக்னூர் பகுதியில் உள்ள செனாப் நதியின் நீர்மட்டம் ஆனது கடந்த பல ஆண்டுகளில் முதல் முறையாக இடுப்பு மட்டத்திற்கும் கீழே குறைந்தது.
ரியாசி மற்றும் ராம்பன் மாவட்டங்களில் உள்ள சலால் மற்றும் பாக்லிஹார் புனல் மின் நிலைய/நீர் மின்னாற்றல் உற்பத்தி அணைகளின் அனைத்து மதகுகளும் உடன் மூடப் பட்டதைத் தொடர்ந்து நீர்மட்டமானது குறைந்துள்ளது.
இந்த ஆற்றின் இயல்பான நீரோட்டத்தினை அடிப்படையாகக் கொண்ட புனல் மின் நிலையங்களாக கட்டப்பட்ட பாக்லிஹார் மற்றும் சலால் ஆகிய அணைகள் ஆனது, இந்தியாவின் நீர் வெளியேற்ற நேரத்தை ஒழுங்குபடுத்த உதவுகின்றன.