TNPSC Thervupettagam

பாக்ஸ் சிலிக்கா கூட்டணி – இந்தியா

March 4 , 2026 11 days 70 0
  • பாக்ஸ் சிலிக்கா பிரகடனத்தில் கையெழுத்திட்டதன் மூலம், அமெரிக்கா தலைமையிலான மூலோபாய கூட்டணியான பாக்ஸ் சிலிக்கா கூட்டணியில் இந்தியா முறையாக இணைந்தது.
  • இந்தக் கூட்டணி முக்கியமான கனிமங்கள், குறைக்கடத்திகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
  • இது உலகளாவிய AI மற்றும் குறைக்கடத்தி விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாப்பதையும், அணிசேரா நாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தியாவின் பங்கேற்பு அதன் பொறியியல் திறமையையும் விரிவடையும் குறைக் கடத்தி உற்பத்தியையும் பயன்படுத்திக் கொள்ளும் என்ற நிலையில் இதில் உருவாக்க நிலையில் உள்ள பத்து ஆலைகளும் அடங்கும்.
  • உறுப்பினர் நாடுகளில் ஆஸ்திரேலியா, கிரீஸ், இஸ்ரேல், ஜப்பான், கத்தார், தென் கொரியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகியவை அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்