குடியரசுத் தின விழாவின் நிறைவினை அதிகாரப் பூர்வமாகக் குறிக்கும் வகையிலான பாசறை திரும்புதல் நிகழ்ச்சியானது விஜய் சௌக் வழித் தடத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியானது, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர் சபா கொரோசியின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
முதன்முறையாக, விஜய் சௌக் வழித்தடத்தில் நடைபெற்ற இந்தப் பிரம்மாண்ட நிகழ்வின் போது வடக்குப் பகுதி கட்டிடம் மற்றும் தென் பகுதி கட்டிடம் ஆகியவற்றின் முகப்பில் முப்பரிமாண உருவக் காட்சிகள் திரையிடப்பட்டன.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 3,500 ஆளில்லா விமானங்கள் இடம் பெற்ற இந்தியாவின் மிகப்பெரிய ஆளில்லா விமானங்கள் கண்காட்சியும் இதில் இடம் பெற்றது.
இந்த நிகழ்ச்சியானது பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் பழமையான இராணுவப் பாரம்பரிய நடைமுறையினைக் குறிக்கிறது.
இத்தகைய விழாவானது ஐக்கியப் பேரரசு, அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பிற நாடுகளின் ஆயுதப் படைகளாலும் நடத்தப் படுகின்றன.