பாசுமதி அரிசிக்கு FSSAI அமைப்பின் ஒழுங்குமுறை தரநிலைகள்
January 18 , 2023 940 days 399 0
இந்தியாவில் முதன்முறையாக, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமானது பாசுமதி அரிசிக்கான அடையாளத் தர நிலைகளைக் குறிப்பிட்டு உள்ளது.
இது 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
பாசுமதி அரிசியின் வர்த்தகத்தில் நியாயமான நடைமுறைகளை நிறுவுதல் மற்றும் உள்நாட்டிலும் உலக அளவிலும் உள்ள நுகர்வோர் நலன்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாசுமதி அரிசியானது பாசுமதி அரிசியின் இயற்கையான வாசனைப் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.
2-அசிடைல்-1-பைரோலின் என்ற வேதிப் பொருள் இருப்பதால் இது ஒரு தனித்துவமான மணம் மற்றும் சுவை கொண்டுள்ளது.
இது செயற்கை வண்ணம், பொலிவுக் காரணிகள் மற்றும் செயற்கை நறுமணங்கள் ஆகியவை இல்லாமல் இருக்க வேண்டும்.