November 10 , 2025
25 days
102
- மாநிலத்தின் பள்ளிக் கல்விக்கான பாடத் திட்டத்தை மறுசீரமைப்பதற்காக தமிழக அரசு இரண்டு குழுக்களை அமைத்துள்ளது.
- பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஓர் உயர் மட்ட நிபுணர் குழு செயல்படும்.
- மாநிலத் திட்டக் குழு உறுப்பினர் சுல்தான் அகமது இஸ்மாயில் தலைமையில் ஒரு பாடத் திட்ட வடிவமைப்புக் குழு செயல்படும்.
- இந்தக் குழுக்கள் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கைக்கு ஏற்ப பாடத் திட்டத்தை மறுவடிவமைப்பு செய்யும்.
- அதன் உறுப்பினர்களாக இஸ்ரோ தலைவர் V. நாராயணன், கிரிக்கெட் வீரர் இரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் கர்நாடக இசைப் பாடகர் C. சௌமியா ஆகியோர் இடம் பெறுவர்.
- பாடத் திட்டம், கற்பித்தல் மற்றும் மதிப்பீட்டில் சீர்திருத்தங்களை உருவாக்க இரண்டு குழுக்களும் மூன்று ஆண்டுகள் பணியாற்றும்.

Post Views:
102