- தங்கள் மாநிலங்களில் பாதிக்கப்படக்கூடிய சாட்சி வைப்பு மையம் (VWDC - Vulnerable Witness Deposition Centre) என்ற ஒரு திட்டத்தை உருவாக்க தேவையான மனிதவளத்தின் மதிப்பீட்டை மூன்று மாதங்களுக்குள் வழங்குமாறு நாட்டின் உயர் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- இந்த மையம் பாதிக்கப்படக் கூடியவர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய ஒரு பாதுகாப்பானச் சூழலை உருவாக்கும்.
- ஒரு மாவட்டத்தில் குறைந்தபட்சம் இவ்வாறான ஒரு மையமாவது நிறுவப்பட வேண்டும்.
- பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களை, பாதிக்கப்படக்கூடிய சாட்சிகளாக உச்ச நீதிமன்றம் சேர்த்துள்ளது.
- பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 377வது பிரிவின் படி வரையறுக்கப் பட்டுள்ளனர்.
மற்ற பாதிக்கப் படக்கூடியவர்கள் பின்வருமாறு
- பாலின வேறுபாடின்றி, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள்
- மனநலப் பாதுகாப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள வகையில் மனநோயால் பாதிக்கப் பட்ட சாட்சிகள்
- செவித் திறன் குறைபாடு அல்லது பேச்சுக் குறைபாடுள்ள நபர்கள்
- நீதிமன்றங்களால் வரையறுக்கப்பட்ட பிற குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட நபர்கள்