இந்திய உச்ச நீதிமன்றமானது பில்கிஸ் யக்கூப் ரசோல் பானோ என்பவருக்கு ரூ.50 இலட்சம் நிவாரண உதவித் தொகை வழங்குமாறு குஜராத் அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.
இவர் 2002 ஆம் ஆண்டில் நரேந்திர மோடி ஆட்சியின் போது குஜராத்தில் நிகழ்ந்த முஸ்லீம்களுக்கு எதிரான இனவாதப் படுகொலையின் போது பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு தற்பொழுது உயிர் வாழ்பவர் ஆவார்.
பிரிவு 357 ஏ-வை உள்ளிணைப்பதற்காக 2008 ஆம் ஆண்டில் குற்றவியல் நடைமுறைச் சட்டமானது திருத்தம் செய்யப்பட்டது.
பிரிவு 357ஏ ஆனது குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு நிவாரணத் தொகை அளிப்பதற்கு ஒரு நிதியை உருவாக்குவதற்காக ஒரு திட்டத்தைத் தயாரிக்க ஒவ்வொரு மாநில அரசையும் கட்டாயமாக்குகின்றது.