பாதுகாப்புத் துறையின் கொள்முதல் குறித்த கையேடு 2025
September 20 , 2025 36 days 69 0
பாதுகாப்புத் துறை அமைச்சர், 2009 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட கடைசி பதிப்பைப் புதுப்பிக்கும் வகையிலான 2025 ஆம் ஆண்டு பாதுகாப்புத் துறையின் கொள்முதல் குறித்த கையேட்டினை (DPM) அங்கீகரித்துள்ளார்.
இந்தப் புதிய கையேடு ஆனது நடப்பு நிதியாண்டில் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள வருவாய் கொள்முதலை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.
இது செயல்பாட்டு மூலதன சிக்கல்களைத் தளர்த்துதல், அபராதங்களுக்கு 5-10% வரை வரம்பு நிர்ணயித்தல் மற்றும் மேம்பாட்டின் போது அறுதியிடப்பட்ட சேதங்களைத் தள்ளுபடி செய்தல் போன்ற தொழில்துறைக்கு உகந்த நடவடிக்கைகளை அறிமுகப் படுத்துகிறது.
இது உள்நாட்டுமயமாக்கல், புதுமை மற்றும் தனியார் தொழில்துறை, பாதுகாப்பு துறை சார் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் மற்றும் இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் போன்ற முதன்மை நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு மூலம் தற்சார்பினை ஊக்குவிக்கிறது.