பாதுகாப்புப் படைத் தளபதிகளின் கருத்தரங்கு: இந்தோ-பசிபிக்
August 27 , 2019 2311 days 663 0
2019 ஆம் ஆண்டின் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த பாதுகாப்புப் படைத் தளபதிகளின் கருத்தரங்கானது தாய்லாந்தின் தலைநகரான பேங்காக்கில் நடத்தப்பட விருக்கின்றது.
இது 33 நாடுகளுக்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படைத் தளபதிகளின் பங்கெடுப்பைக் காணவிருக்கின்றது.
இந்தியாவின் சார்பாக தலைமைப் பாதுகாப்புப் படைப் பணியாளரின் தலைவர் (Chairman of the Chiefs of Staff Committee - COSC) மற்றும் விமானப் படைத் தலைமைத் தளபதியான பைரேந்தர் சிங் தனோவா கலந்து கொள்ளவிருக்கின்றார்.
இக்கருத்தரங்கின் கருத்துரு, “தடையற்ற மற்றும் திறந்தவெளி இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பு” என்பதாகும்.