பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் வழங்கப்பட்ட போர் சார்ந்த மென்பொருள்
September 18 , 2019 2127 days 623 0
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது (Defence Research Development Organisation - DRDO) ஒரு புதிய தலைமுறை அடிப்படையிலான போர் சார்ந்த மென்பொருளை இந்தியக் கடற்படைக்கு வழங்கியுள்ளது.
இந்த மென்பொருளானது சமீபத்திய தொழில்நுட்ப மற்றும் கணினி கருவிகளைப் பயன்படுத்தி, பயிற்சியளிக்கும் சூழலை உருவாக்குவதற்கு கடல்சார் போர் மையங்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது புது தில்லியை அடிப்படையாகக் கொண்ட அமைப்பு சார்ந்த ஆய்வுகள் & பகுப்பாய்வு நிறுவனம் (Institute for Systems Studies and Analysis - ISSA) மற்றும் விசாகப்பட்டினத்தில் உள்ள கடல்சார் போர் மையங்கள் ஆகியவற்றால் மேம்படுத்தப்பட்டது.