பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் புதியத் தலைவர்
August 30 , 2022 1209 days 714 0
புகழ்பெற்ற அறிவியலாளர் சமீர் V.காமத், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலாளராகவும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களின் அறிவியல் ஆலோசகராக நியமிக்கப் பட்ட G. சதீஷ் ரெட்டி நியமிக்கப்பட்டதை அடுத்து இவர் இந்தப் பொறுப்பினை ஏற்க உள்ளார்.
ரெட்டி 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கப் பட்டது.