பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் 64வது நிறுவன தினம் – ஜனவரி 01
January 4 , 2022 1370 days 659 0
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது இந்தியாவில் உள்ள மிகப் பெரிய மற்றும் மிகப் பரந்த ஒரு ஆராய்ச்சி அமைப்பாகும்.
இது பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்குகிறது.
இதன் தலைமையிடம் டெல்லியில் அமைந்துள்ளது.
இது 1958 ஆம் ஆண்டு ஜனவரி 01 அன்று இந்திய ஆயுதத் தொழிற்சாலையின் தொழில் நுட்ப மேம்பாட்டு மற்றும் உற்பத்தி இயக்குநரகம் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றினைப் பாதுகாப்பு அறிவியல் என்ற அமைப்புடன் இணைத்து உருவாக்கப் பட்டது.
இந்த அமைப்பானது கோவிட்-19 தடுப்பிற்காக 2DG என்ற மருந்தினையும் உருவாக்கி உள்ளது.