பாதுகாப்புத் துறை அமைச்சர் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பாதுகாப்பு உற்பத்தித் துறையின் (Department Defence Production - DDP) முகப்புப் பலகையை வெளியிட்டுள்ளார்.
இந்த முகப்புப் பலகையானது பாதுகாப்பு தொடர்பான ஏற்றுமதிப் பொருட்கள், பாதுகாப்பு தொடர்பான இழப்பீடுகள், அறிவுசார் சொத்துரிமைகள் மற்றும் ரக்சா கியான் சக்தித் திட்டம் உள்ளிட்ட முக்கியமான பாதுகாப்பு உற்பத்திக் கூறுகளைக் கண்காணிப்பதற்குப் பாதுகாப்புத் துறை அமைச்சகத்திற்கு உதவும்.
இந்த முகப்புப் பலகை பொது மக்களுக்காக “ddpdashboard.gov.in” என்ற இணையதளத்தில் இருக்கும்.