TNPSC Thervupettagam

பாரதிய அந்தரிக்சா நிலையத்தின் (BAS) முதல் தொகுதி

August 29 , 2026 15 days 90 0
  • 2035-ஆம் ஆண்டுக்குள் தனது சொந்த விண்வெளி நிலையத்தை நிறுவுவதற்கான பணிகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது.
  • முன்மொழியப்பட்ட பாரதிய அந்தரிக்சா நிலையத்தின் முதல் தொகுதிக்கு இஸ்ரோ ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த நிலையத்தின் முதல் தொகுதி BAS-01 என்று அழைக்கப்படுகிறது.
  • இது 400 முதல் 450 கிலோமீட்டர் உயரத்தில், புவியின் தாழ் சுற்றுப்பாதையில் 52 டன் எடையுள்ள விண்வெளி நிலையமாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை தங்குவதற்கு, மூன்று முதல் நான்கு விண்வெளி வீரர்களைக் கொண்ட குழுவிற்கு ஆதரவளிக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • முன்மொழியப்பட்ட இந்த நிலையம் ஐந்து தொகுதிகளைக் கொண்டிருக்கும்.
  • அதே சமயம், ககன்யான் திட்டமும் செயல்பாட்டில் உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்