2024 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிலுள்ள 6 லட்சம் கிராமங்களுக்கு பாரத் இணைய வசதித் திட்டத்தின் கீழ் இணைய இணைப்பு வசதி கிடைக்கும்.
ஒவ்வொரு வீட்டிற்கும் இணைய வசதி வழங்குதல் மற்றும் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் மலிவு விலையிலான சாதனத்தின் உதவியுடன் இணைய வசதியை வழங்குதல் என்ற தனது குறிக்கோளை நோக்கி அரசு செயல்பட்டு வருகிறது.
பாரத் இணைய முன்னெடுப்பு
இது பாரத் பிராட்பேண்ட் நெட்வொர்க் லிமிடெட் என்ற ஒரு நிறுவனத்தினால் அமல்படுத்தப்படும் ஒரு முதன்மைத் திட்டமாகும்.
இந்தச் சிறப்புப் பயன்பாட்டு நிறுவனமானது 1956 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ், இந்திய அரசினால் நிறுவப்பட்டது.