TNPSC Thervupettagam

பாரத் கட்டணம் செலுத்தும் முறை

September 18 , 2019 2127 days 872 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது நுகர்வோருக்குச்  சாதகமான ஒரு முன்னெடுப்பாக, பாரத் கட்டணம் செலுத்தும் முறையின் (Bharat Bill Payment SystemBBPS) நோக்கம் மற்றும் அதன் வரம்பெல்லையை விரிவுபடுத்தியுள்ளது.
  • தன்னார்வ அடிப்படையில், தகுதியுள்ள பங்கேற்பாளர்களாக தொடர்ச்சியான கட்டணங்கள் மற்றும் பண வழங்கீடுகளைத் (முன்பணம் செலுத்துதல் தவிர) திரட்டும் அனைத்து வகைக் கட்டணதாரர்களும் இதில் அடங்குவர்.
  • பள்ளிக் கட்டணம், காப்பீட்டுத் தொகை, மாதாந்திர தவணைத் தொகைகள் மற்றும் நகராட்சி வரி ஆகியவை BBPS மூலமாக செலுத்தலாம்.
இதுபற்றி
  • BBPS என்பது ஒரு ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறையாகும். இது ஆன்லைன்  (நிகழ்நேரம்) மற்றும் பணியில் உள்ள முகவர்களின் அமைப்பு வழியாக செயல்படக் கூடிய கட்டணச் சேவையை வாடிக்கையாளர்களுக்கு  வழங்குகின்றது.
  • இது இந்திய தேசியப்  பணவழங்கீட்டுக் கழகத்தின் (National Payments Corporation of India) கீழ் செயல்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்