இந்த தீபாவளிப் பண்டிகையை ஒட்டி, தீபிகா படுகோனே மற்றும் விளையாட்டு வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் பிரதமர் மோடியின் 'பாரத் கி லக்ஷ்மி' என்ற முன்னெடுப்பு முயற்சிக்கு ஜோதியைத் தாங்கிச் சென்றனர்.
பெண்களைக் கௌரவிப்பதற்கும் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் 'மன் கி பாத்' நிகழ்ச்சியின் 57வது அத்தியாயத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியால் #பாரத்கிலட்சுமி என்ற பிரச்சாரம் ஆனது சமூக ஊடகங்களில் தொடங்கப்பட்டது.
‘பாரத் கி லட்சுமி’ பிரச்சாரம் ஆனது பொது நலனுக்காக பல்வேறு துறைகளில் பெண்கள் செய்த சாதனைகளை அடையாளப் படுத்தும் விதத்தில் பெண்மணிகளை கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.