TNPSC Thervupettagam

பாரத் சர்வதேச அரிசி மாநாடு (BIRC) 2025

November 12 , 2025 15 hrs 0 min 21 0
  • பாரத் சர்வதேச அரிசி மாநாடு (BIRC) 2025 ஆனது புது டெல்லியில் நடைபெற உள்ளது.
  • இது இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் வணிகத் துறையால் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
  • அரிசி விநியோகச் சங்கிலியில் இந்தியாவை ஒரு உலகளாவியத் தலைமையாக நிலை நிறுத்துவதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.
  • இது 1.80 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய அரிசி சந்தைகளுக்கான வாய்ப்புகளைத் திறக்கும் என்பதோடு, மேலும் இதில் 25,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஏற்றுமதிப் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • இந்தியா ஆண்டுதோறும் சுமார் 150 மில்லியன் டன் அரிசியை உற்பத்தி செய்கிறது என்பதோடு இது உலக உற்பத்தியில் கிட்டத்தட்ட 28 சதவீதமாகும்.
  • 2024–25 ஆம் ஆண்டில் இந்தியா, சுமார் 12.95 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான 20.1 மில்லியன் மெட்ரிக் டன் அரிசியை ஏற்றுமதி செய்தது.
  • வேளாண் தொழில்நுட்ப காட்சிப் பகுதியில் ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான அரிசி வகைப்பிரிக்கும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும்.
  • சுமார் 330 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ள உலகளாவிய அரிசித் துறையின் மதிப்பு, சுமார் நான்கு பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு ஆதரவளிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்