பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் மருந்திற்கு அவசரகாலப் பயன்பாட்டிற்கான அனுமதி
November 5 , 2021 1426 days 489 0
பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பு மருந்தினை 18 வயதினருக்கும் அதற்கு மேற்பட்டவர்களுக்கும் செலுத்துவதற்காக வேண்டி அதன் அவசரகாலப் பயன்பாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
கோவாக்சின் என்பது முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு தடுப்பு மருந்து ஆகும்.
இது ஹைதராபாத்திலுள்ள பாரத் பயோடெக் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தினால் தயாரிக்கப்பட்டது.
உலக சுகாதார அமைப்பானது இதுவரையில் பைசர் - பயான்டெக், ஆஸ்ட்ராசெனிகா – Sk பயோ/இந்திய சீரம் நிறுவனம், ஜான்சன் & ஜான்சன், மாடெர்னா மற்றும் சைனோஃபார்ம் ஆகியவற்றின் தடுப்பு மருந்திற்கான அவசரகாலப் பயன்பாட்டிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.