சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகமானது 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் பயணிகள் கார்களுக்கான BS-VII உமிழ்வுத் தரநிலைகளை அறிமுகப் படுத்த முன்மொழிந்துள்ளது.
இந்தத் தரநிலைகள் கடுமையான வெளியேற்ற-உமிழ்வு வரம்புகள், நிஜ உலக ஓட்டுநர் சோதனைகள் மற்றும் உள்-உமிழ்வுக் கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம் வாகன மாசுபாட்டைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இதன் செயலாக்கமானது வெளியேற்ற உமிழ்வுகள், பிரேக் துகள்கள், டயர் தேய்மானம் மற்றும் மின்கல நீடித்துழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கி ஏப்ரல் 2029, ஏப்ரல் 2031 மற்றும் ஏப்ரல் 2035 என மூன்று கட்டங்களாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விதிகளானது பெட்ரோல், டீசல், அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG), எத்தனால் கலந்த எரிபொருள்கள், ஹைட்ரஜன், கலப்பின மற்றும் மின்சார வாகனங்களை உள்ளடக்கியது; மின்சார வாகன மின்கலங்கள் 5 ஆண்டுகளுக்கு அல்லது 100,000 கி.மீ வரை குறைந்தபட்சம் 75% செயல்திறனைத் தக்கவைக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் வாகன பாஸ்போர்ட்/சீட்டு வாகன உமிழ்வு, எரிபொருள் நுகர்வு மற்றும் மின்கலன் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை வழங்கும்; இந்தியா தற்போது BS-VI தர நிலைகளைப் பின்பற்றுகிறது, இது நாடு முழுவதும் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.