TNPSC Thervupettagam
November 29 , 2025 6 days 54 0
  • பாரத் NCAP (புதிய கார் மதிப்பீட்டுத் திட்டம்) 2.0 என்பது இந்தியாவில் விற்கப்படும் கார்களுக்கான திருத்தப்பட்ட வாகனப் பாதுகாப்பு மதிப்பீட்டுத் திட்டமாகும்.
  • இது 2023 ஆம் ஆண்டு பாரத் NCAP வழிகாட்டுதல்களைப் புதுப்பிப்பதற்காக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகத்தால் (MoRTH) தொடங்கப் பட்டது.
  • சோதனை மற்றும் சான்றிதழ் வழங்கீடு ஆனது புனேவில் உள்ள மத்திய சாலைப் போக்குவரத்து நிறுவனத்தினால் (CIRT) மேற்கொள்ளப்படுகிறது.
  • இந்தத் திட்டம் விபத்தில் ஏற்படும் மோதல் காப்புத் தகுதி, விபத்து-தவிர்ப்பு தொழில் நுட்பங்கள் மற்றும் பாதசாரிகள் / பாதிக்கப்படக்கூடிய சாலைப் பயனர் பாதுகாப்பு ஆகியவற்றினை மதிப்பிடுகிறது.
  • இதன் ஐந்து மதிப்பீட்டுக் கூறுகளில் பாதுகாப்பான வாகனம் ஓட்டுதல், விபத்து தவிர்ப்பு, மோதலில் பாதுகாப்பு, பாதிக்கப்படக் கூடிய சாலை பயனர் பாதுகாப்பு மற்றும் விபத்துக்குப் பிந்தைய பாதுகாப்பு ஆகியவை அடங்கும்.
  • இந்தத் திட்டம் பாதசாரிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதையும், 2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியா சாலை விபத்து சார்ந்த இறப்புகளை 50% குறைக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்