பாரத சுழிய உமிழ்வு சரக்குகள் இடமாற்றக் கொள்கை 2024
September 4 , 2024 306 days 247 0
இந்திய அரசானது “பாரத சுழிய உமிழ்வு சரக்குந்து பொருள் இடமாற்றக் கொள்கை ஆலோசனை” ஆவணத்தை அறிமுகப்படுத்தியது.
இதன் நோக்கம் எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் கார்பன் நடு நிலைத்தன்மை ஆகியவற்றைத் தேசிய இலக்குகளுக்கு மிக ஒத்த அளவில், சுழிய உமிழ்வு சரக்கு இடம் பெயர்வை ஊக்குவிப்பதன் மூலம் இந்தியாவை நிலையான எதிர்காலத்தை நோக்கி வழி நடத்துவதாகும்.
இந்த மின்சாரம் அல்லது ஹைட்ரஜன் போன்ற தூய்மையான ஆற்றல் மூலங்களால் இயக்கப்படும் வாகனங்களானது எவ்வித உமிழ்வையும் உருவாக்காது.
டீசல் சரக்குந்துகளுடன் ஒப்பிடும் போது இவை கார்பன் வெளியேற்றத்தை 44% முதல் 79% வரை குறைக்கிறது.