நான்கு வாரங்களுக்குள் தமிழ்நாடு பாரம்பரிய ஆணையத்தினை (TNHC) நிறுவ சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.
12 ஆண்டு கால தாமதத்திற்குப் பிறகு, 2024 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதியன்று TNHC சட்டம் அமலுக்கு வந்த போதிலும், அந்த ஆணையம் இன்னும் அமைக்கப்படவில்லை என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
தேசிய அல்லது மாநிலத் தொல்பொருள் சட்டங்களின் கீழ் வராத பாரம்பரியக் கட்டிடங்களைப் பாதுகாப்பதற்காக இந்த ஆணையம் உருவாக்கப்பட உள்ளது.
இந்து சமய மற்றும் அறநிலைய (HR&CE) துறை மேற்கொள்ளும் கோயில் கட்டுமான நடவடிக்கைகளை நிறுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.