பாரம்பரிய மருத்துவம் குறித்த WHO உலகளாவிய உச்சி மாநாடு
December 22 , 2025 4 days 71 0
பாரம்பரிய மருத்துவம் குறித்த இரண்டாவது உலக சுகாதார அமைப்பின் (WHO) உலகளாவிய உச்சி மாநாடு இந்தியாவின் புது டெல்லியில் நடைபெறுகிறது.
இது WHO மற்றும் இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தால் இணைந்து நடத்தப் படுகிறது.
பாரம்பரிய மருத்துவம் மூலம் மக்களுக்கும் கிரகத்திற்கும் சமநிலையை மீட்டெடுக்க ஓர் உலகளாவிய இயக்கத்தை முன்னெடுப்பதை இந்த உச்சி மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நிகழ்வு "Restoring balance: The science and practice of health and well-being" என்ற கருத்துருவின் கீழ் நடத்தப்படுகிறது.
WHO அமைப்பின் உலகளாவிய பாரம்பரிய மருத்துவ உத்தி 2025–2034 என்ற உத்தியின் மூலம் வழி நடத்தப்படும் இது, பாரம்பரிய மருத்துவத்தைச் சுகாதார அமைப்புகளில் பாதுகாப்பான முறையில், ஆதார அடிப்படையில் மற்றும் நிலையான வகையில் ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்துகிறது.
இந்த உச்சி மாநாட்டில் 1.5 மில்லியன் அறிவியல் அறிக்கை வெளியீடுகள் மற்றும் வளங்களைக் கொண்ட டிஜிட்டல் களஞ்சியமான WHO பாரம்பரிய மருத்துவ உலகளாவிய நூலகம் தொடங்கப்பட்டது.