பாராளுமன்றச் சபாநாயகர்களின் 5வது உலக மாநாடு மற்றும் தீவிரவாத எதிர்ப்பு மீதான முதலாவது உலகளாவியப் பாராளுமன்ற உச்சி மாநாடு ஆகியவை ஆஸ்திரியாவின் வியன்னா என்னுமிடத்தில் நடத்தப்பட்டது.
வியன்னாவில் நடைபெற்ற இந்த இரு நிகழ்வுகளும் ஐக்கிய நாடுகளின் ஆதரவுடன் ஜெனீவாவிலுள்ள பாராளுமன்றங்களுக்கிடைப்பட்ட ஒன்றிய அமைப்பு மற்றும் ஆஸ்திரியப் பாராளுமன்றம் ஆகியவற்றினால் ஏற்பாடு செய்யப்படுகிறது.
கோவிட்-19 பெருந்தொற்றிற்குப் பிறகு நேரடிப் பங்கேற்போடு நடைபெறும் ஒரு உலகளாவியப் பாராளுமன்ற நிகழ்வு இதுவாகும்.
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் மாநிலங்களவைத் துணை தலைவர் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.