TNPSC Thervupettagam

பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்றவியல் குற்றச்சாட்டுகள்

August 30 , 2025 25 days 71 0
  • ஒரு பகுப்பாய்வு, 31% பாராளுமன்ற உறுப்பினர்கள் (MP) மற்றும் 29% சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA) மீது கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகள் இருப்பதாகக் காட்டுகிறது.
  • ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட தண்டனை விதிக்கக்கூடிய குற்றங்கள் அல்லது பிணையில் வெளிவர முடியாத குற்றங்கள் உள்ளிட்ட கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன.
  • இத்தகையக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் மக்களவைப் பாராளுமன்ற உறுப்பினர்களின் விகிதம் 2009 ஆம் ஆண்டில் 14% ஆக இருந்தது என்பதோடு இது 2024 ஆம் ஆண்டில் 31% ஆக இரட்டிப்பாகியுள்ளது.
  • தெலுங்கானாவில் 71% அளவிலான தீவிர குற்றச்சாட்டுகளுடன் கூடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிக சதவீதத்தில் உள்ளனர் என்ற நிலையில் அதைத் தொடர்ந்து பீகார் 48% பங்கினைக் கொண்டுள்ளது.
  • கட்சிகளில், பாஜகவில் 63 பாராளுமன்ற உறுப்பினர்கள் (26%) கடுமையான வழக்குகளை எதிர்கொள்கின்றனர் என்கிற அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியில் 32 பாராளுமன்ற உறுப்பினர்கள் (32%) கடுமையான / தீவிர வழக்குகளை எதிர் கொள்கின்றனர்.
  • சட்டமன்ற உறுப்பினர்களைப் பொறுத்தவரையில், ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 56% உறுப்பினர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர் என்பதோடு உத்தரப் பிரதேசத்தில் 154 சட்டமன்ற உறுப்பினர்கள் (38%) கடுமையான வழக்குகளை எதிர்கொள்கின்றனர்.
  • தெலுங்கு தேசம் கட்சி (TDP) மற்றும் இராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) ஆகிய கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் கடுமையான வழக்குகளை எதிர்கொள்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்